/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பட்டா இல்லையென்றால் ஓட்டு கேட்க வேண்டாம்' பெண்களால் அமைச்சர் அதிர்ச்சி

ADDED : ஜன 01, 2026 04:55 AM
தாராபுரம்: தாராபுரம் அருகே, வீட்டுமனை பட்டா தொடர்பாக முறையிட்ட பெண்கள், 'இஸ்லாமியருக்கு ஏதுமில்லை என்றால், ஓட்டு கேட்க வேண்டாம்' என கூறியதால், அமைச்சர் கயல்விழி அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியில் பூமிதான நிலம் உள்ளது. அதை தங்களுக்கு வீட்டுமனை பட்டாக்களாக வழங்க வேண்டும் என, வருவாய்த் துறையினரிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த நிலம், பூமிதான திட்டம் மூலம், ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டு விட்டது என, அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில், தாராபுரத்தில் உள்ள மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி வீட்டுக்கு சென்ற அலங்கியத்தை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல், அலைக்கழிப்பதாக முறையிட்டனர்.மேலும் அங்கு வந்த இஸ்லாமிய பெண்கள், எங்களுக்கு இல்லை என்றால் ஓட்டு கேட்க வேண்டாம் எனக் கூறி, வாக்குவாதம் செய்ததால் அமைச்சர் கயல்விழி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர்களை சமாதானம் செய்து, கலெக்டரிடம் சொல்லி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, பெண்கள் கலைந்து சென்றனர்.