/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நினைத்ததை நினைவேற்றும் மண்டல பூஜை வழிபாடு; அவிநாசி கோவிலில் நாளை மண்டலாபிேஷகம் நிறைவு
/
நினைத்ததை நினைவேற்றும் மண்டல பூஜை வழிபாடு; அவிநாசி கோவிலில் நாளை மண்டலாபிேஷகம் நிறைவு
நினைத்ததை நினைவேற்றும் மண்டல பூஜை வழிபாடு; அவிநாசி கோவிலில் நாளை மண்டலாபிேஷகம் நிறைவு
நினைத்ததை நினைவேற்றும் மண்டல பூஜை வழிபாடு; அவிநாசி கோவிலில் நாளை மண்டலாபிேஷகம் நிறைவு
ADDED : மார் 20, 2024 11:08 PM

அவிநாசி : ''மண்டலாபிேஷக நிறைவு நாள் பூஜைகள் பங்கேற்று வழிபட்டால், பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும்,'' என, பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல வேதபாடசாலை முதல்வர் ஸ்ரீசுந்தரமூர்த்தி சிவம் தெரிவித்துள்ளார்.
அவிநாசி திருத்தலத்தில் அருள்பாலிக்கும், பெருங்கருணைநாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம், கடந்த பிப்., 2ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, தினமும், மூன்று கால மண்டல பூஜையும், அன்னதானமும் சிறப்புடன் நடந்து வருகிறது. மண்டல பூஜை, 22ம் தேதியுடன் நிறைவு பெறுவதால், பக்தர்கள் ஆதிசிவனாகிய அவிநாசியப்பரை வணங்கி பேரருளை பெறலாம் என, ஆன்மிக பெரியோர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல வேதபாடசாலை முதல்வர் ஸ்ரீசுந்தரமூர்த்தி சிவம் கூறியதாவது:
எல்லாம்வல்ல திருவருள் மற்றும் குருவருளுடன், அவிநாசியப்பர் கோவில் கும்பாபிேஷக விழா வெகு விமரிசையாக நடந்தது. தொடர்ச்சியாக, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை என, மூன்று கால மண்டலாபிேஷக பூஜைகள், வேதாகம விதிமுறைகளின்படி நடந்து வருகிறது.
மொத்தம், 48 நாட்கள் நடக்கும் மண்டலாபிேஷக வழிபாடு, 22ம் தேதி நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு நாளும், சிறப்பு அபிேஷகம், யாகம், அலங்காரபூஜைகள் நடந்து வருகின்றன. கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பது போல், பக்தர்கள் கும்பாபிேஷக விழாவில் கோபுர அபிேஷகத்தை கண்டு வணங்குவது மரபு.
கும்பாபிேஷகத்தை கண்டு களிக்க இயலாதவர்கள், மண்டலாபிேஷக பூஜையில் பங்கேற்று பயன்பெறலாம். குறிப்பாக, மண்டலாபிேஷக நிறைவு பூஜையில் தான், கும்பாபிேஷக விழா பூர்த்தியடைகிறது. மண்டலாபிேஷக வழிபாடு என்பது, உத்தமமான பலன்களை அளிக்கும். மண்டலபூஜை நிறைவு நாள் வழிபாடு என்பது, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் பெற்றது.
மண்டலாபிேஷக நிறைவுநாளில், கலசாபிேஷகம், சங்காபிேஷகம் என, பல்வகை அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடக்கும். தெப்போற்சவமும் நடைபெறும். பக்தர்கள், மண்லாபிேஷக நிறைவு நாள் வழிபாட்டில் பங்கேற்று, பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசியப்பரின் அருளை பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
நாள் முழுவதும்
அன்னதானம்
மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு, நாளை காலை, 8:00 மணி முதல் துவங்கி, இரவு வரை கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசிலிங்கேஸ்வரர் அன்னதான குழுவினர் செய்துள்ளனர்.

