sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பின்னலாடை நகருக்கு  வரிசை கட்டும் வர்த்தக வாய்ப்புகள்: வரியில்லா ஒப்பந்தங்கள் மூலம் சாத்தியமாகும்

/

பின்னலாடை நகருக்கு  வரிசை கட்டும் வர்த்தக வாய்ப்புகள்: வரியில்லா ஒப்பந்தங்கள் மூலம் சாத்தியமாகும்

பின்னலாடை நகருக்கு  வரிசை கட்டும் வர்த்தக வாய்ப்புகள்: வரியில்லா ஒப்பந்தங்கள் மூலம் சாத்தியமாகும்

பின்னலாடை நகருக்கு  வரிசை கட்டும் வர்த்தக வாய்ப்புகள்: வரியில்லா ஒப்பந்தங்கள் மூலம் சாத்தியமாகும்


UPDATED : டிச 25, 2025 07:05 AM

ADDED : டிச 25, 2025 05:58 AM

Google News

UPDATED : டிச 25, 2025 07:05 AM ADDED : டிச 25, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,: புதிய வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்பட்டு வருவது, திருப்பூருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கும்; புதிய சந்தை வாய்ப்புகள்மென, பின்னலாடை ஏற்றுமதி யாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை, வங்கதேசம், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்கொரியா, சுவிட்சர்லாந்து, மொரீஷியஸ், ஐஸ்லாந்து, நார்வே உட்பட, ஒன்பது நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து, நடைமுறையில் உள்ளன.

எட்டு ஆண்டு கால முயற்சியால், பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது; வரும் நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம், ஓமன் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. நேற்றுமுன்தினம் நியூசிலாந்துடன் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், 10 சதவீத வரிச்சலுகையுடன் புதிய வர்த்தகம் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஓமன் நாட்டை பொறுத்தவரை, துபாய் வழியாக, ஆடை ஏற்றுமதி நடந்து வந்தது. தற்போது, நேரடி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், 5 சதவீத வரி சலுகையுடன், நேரடியாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அமெரிக்கா போன்ற சில சந்தைகளை மட்டும் சார்ந்து இயங்காமல், மாற்று சந்தையை ஏற்படுத்தலாம். புதிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தகம் செய்ய, இம்மூன்று ஒப்பந்தங்களும் கைகொடுக்கும். விரைவில், ஐரோப்பிய நாடுகளுடன் உருவாகும் வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என, தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.

ரூ.460 கோடி ஆடைகள் நியூசிலாந்துக்கு ஏற்றுமதி சக்திவேல், துணைத்தலைவர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) : தொழிலாளர் நிறைந்த ஜவுளித்துறைக்கு இது ஒரு மைல்கல்; உலகளாவிய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உதவியாக இருக்கும். இந்திய பொருட்களுக்கு, 10 சதவீத வரி சலுகை கிடைக்கும். கடந்த 2024ல், நியூசிலாந்து, 10 ஆயிரத்து, 394 கோடி ரூபாய்க்கு ஆடைகளை இறக்குமதி செய்துள்ளது; அதில், பின்னலாடைகள் மட்டும், 5 ஆயிரத்து 242 கோடி மதிப்பிலானவை. நியூசிலாந்துக்கான, இந்திய ஆடை ஏற்றுமதி, 460 கோடி ரூபாயாக இருக்கிறது. விரைவான பேச்சுவார்த்தையால், இந்த ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது.


-

ஆப்ரிக்க நாடுகளுடன் ஏற்றுமதி அதிகரிக்கும் சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்: ஓமன் நாட்டுடன் குறைவான அளவு வர்த்தகம் நடந்து வருகிறது; அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், 5 சதவீதத்துக்கும் மேற்பட்ட வரிச்சலுகை கிடைக்கும். இதன் மூலம் ஓமன் மட்டுமல்ல; ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்த பிறகு, அடுத்த நிதியாண்டில் கைமேல் பலனளிப்பதாக இருக்கும். ஒட்டுமொத்த ஏற்றுமதியாளரின் எதிர்பார்ப்பு, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவேற வேண்டும் என்பதுதான்.


----

சிறப்பான வாய்ப்பு நிச்சயம் கைகூடும் இளங்கோவன், தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) : ஓமன், நியூசிலாந்து நாடுகளுடன் வர்த்தகம் குறைவாகத்தான் நடந்து வருகிறது; இருப்பினும், இனி முழுமையான வரிச்சலுகை கிடைக்கும். நியூசிலாந்து ஏற்றுமதிக்கு, 10 சதவீத வரி சலுகை கிடைக்கும். பிரிட்டனை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் போது, திருப்பூருக்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது.


----

அமெரிக்கா, ஐரோப்பாவுடன்ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் முத்துரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) : திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை அதிகம் சார்ந்துள்ளது. அதற்கு பிறகுதான், பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி நடக்கிறது. புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதை வரவேற்கிறோம்; இருப்பினும், அமெரிக்கா மற்றம் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படும் போது, திருப்பூர் நேரடியாக பயன்பெறும்.


இந்தியாவுடன் வரியில்லா ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நாடுகள்

 வங்கதேசம்

 ஜப்பான்

 ஆஸ்திரேலியா

 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

 தென்கொரியா

 சுவிட்சர்லாந்து

 மொரீஷியஸ்

 ஐஸ்லாந்து

 நார்வே

அமலாக உள்ள நாடுகள்

 பிரிட்டன்

 ஓமன்

 நியூசிலாந்து

நியூசிலாந்துடனான இந்திய பின்னலாடை ஏற்றுமதி நிதியாண்டு - ஏற்றுமதி மதிப்பு

2020-21 - ரூ.106 கோடி

2021-22 - ரூ.131 கோடி

2022-23 - ரூ.139 கோடி

2023-24 - ரூ.150 கோடி

2024-25 - ரூ.164 கோடி






      Dinamalar
      Follow us