/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரவுடிக்கு அரிவாள் வெட்டு 2 பேர் மீது 'குண்டாஸ்'
/
ரவுடிக்கு அரிவாள் வெட்டு 2 பேர் மீது 'குண்டாஸ்'
ADDED : டிச 23, 2024 04:05 AM
திருப்பூர் : தேனி மாவட்டம், மஞ்சலாறை சேர்ந்தவர் ராஜேஷ், 38; ரவுடி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக கடந்த, 2ம் தேதி திருப்பூர் வந்தார்.
ஊத்துக்குளி சாலை, பாளையக்காட்டில் இரவு ராஜேைஷ ஏழு பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். திருப்பூர் வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து, நண்பனை கொன்ற ராஜேஷை பழிவாங்க திட்டமிட்டு, சமாதானம் பேச அழைத்து, அரிவாளால் வெட்டியது தெரிந்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட நாய் பாஸ்கர், 27, ஜெகதீஷ், 30 என, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பொது அமைதிக்கும், மக்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து வருவதால், பாஸ்கர், 27, ஜெகதீஷ், 30 ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

