/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்ணாடிபுத்துார் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
கண்ணாடிபுத்துார் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
கண்ணாடிபுத்துார் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
கண்ணாடிபுத்துார் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 08, 2025 05:42 AM

உடுமலை: மடத்துக்குளம் அருகேயுள்ள சர்க்கார் கண்ணாடிப்புத்தூரில், பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிேஷக விழாவில், நேற்று முன்தினம் புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தமும், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, யாக சாலை பூஜைகள் நடந்தன.
விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதற்கால யாக பூஜையும், கும்பா ஸ்தாபனம், வாஸ்து சாந்தி, இரண்டாம் கால யாக பூஜையும், எந்திர ஸ்தாபனம், சுவாமி நிலைநாட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, மங்கள இசை, கோ பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நாடி சந்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசம் மற்றும் மூலவர் கும்பாபிேஷகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐயப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்பாபிேஷக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

