/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சோழீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
சோழீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : பிப் 25, 2024 10:30 PM

உடுமலை:உடுமலை முத்தையா பிள்ளை லே -அவுட், சோழீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் இன்று, நடக்கிறது.
உடுமலை முத்தையா பிள்ளை லே - அவுட்டில் ஸ்ரீசக்தி விநாயகர், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்தில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ லிங்கோத்பவர் சுவாமி சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிேஷக விழா கடந்த 23ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம், ஸ்ரீ மகா கணபதி ேஹாமம், ஸ்ரீ லட்சுமி ேஹாமம், ஸ்ரீ நவக்கிரக ேஹாமம் நடைபெற்றது.
நேற்று, காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.
இன்று (26ம் தேதி) காலை, 9:00 மணிக்கு, கோபுர விமானம் மற்றும் பரிவாரங்களுக்கு மகா கும்பாபிேஷகமும், தொடர்ந்து, ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை உடனமர் ஸ்ரீ சோழீஸ்வர சுவாமிக்கும் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
பின்னனர் மகா அபிேஷகம், அலங்காரம், கோ தரிசனம், தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

