/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்று மந்தம்; இன்று வேகம் தேர்தல் படுத்தும் பாடு
/
அன்று மந்தம்; இன்று வேகம் தேர்தல் படுத்தும் பாடு
ADDED : மார் 11, 2024 01:33 AM
பல்லடம்:பல்லடம் வட்டாரத்தில், 3.80 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சி மற்றும் ஒன்றியம் தி.மு.க., வசமும், சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வசமும் உள்ளது. கோவை லோக்சபா தொகுதியின் கீழ் உள்ள பல்லடம் தொகுதியில் ஓட்டுகளை கவர அனைத்து கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றன. இவ்வகையில், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், திடீரென, பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடந்துள்ளது.
டெண்டர் விவகாரத்தை தொடர்ந்து, வார்டு கவுன்சிலர்கள் சிலருடன் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், வார்டுகளில் பணிகளை நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
தற்போது, லோக்சபா தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு ஒரே மாதத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. இது, தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்கான ஒரு யுத்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

