/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று கூடுகிறது கிராமசபை கூட்டம்; பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்டம்
/
இன்று கூடுகிறது கிராமசபை கூட்டம்; பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்டம்
இன்று கூடுகிறது கிராமசபை கூட்டம்; பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்டம்
இன்று கூடுகிறது கிராமசபை கூட்டம்; பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்டம்
ADDED : அக் 02, 2024 06:35 AM
திருப்பூர் : 'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்றார் மகாத்மா காந்தி. 'கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பொருளாதார முன்னேற்றம்; நம் நாட்டில் ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக இயங்க வேண்டும். கிராம சுயராஜ்யமே நாட்டின் அடிப்படை நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும்' என்பது காந்தியடிகளின் கனவு.
அவரது கனவை நனவாக்கும் வகையில் தான், அவரது பிறந்த நாளான இன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூடுகிறது. கிராம சபையில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது.
வளர்ச்சி திட்டம்!
அதன்படி, '15வது மத்திய நிதி மானிய குழு வாயிலாக வழங்கப்படும் மானிய நிதி, கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே உள்ள கட்டுமானம் மற்றும் பிற வசதிகளை கருத்தில் கொண்டு, 2025 - 2026ம் நிதியாண்டிற்கு தேவையான பணிகள், வசதிகள் குறித்து கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க வேண்டும்.
ஆண்டு தோறும் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு வந்தாலும், திட்டத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பொதுமக்களின் பங்களிப்புடன், மக்களுக்கான அமைதி இயக்கமாக மாற்ற வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.

