/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடந்த ஆண்டுக்கு குப்பை வரி வசூல்; அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் வாசிப்பு
/
கடந்த ஆண்டுக்கு குப்பை வரி வசூல்; அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் வாசிப்பு
கடந்த ஆண்டுக்கு குப்பை வரி வசூல்; அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் வாசிப்பு
கடந்த ஆண்டுக்கு குப்பை வரி வசூல்; அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் வாசிப்பு
ADDED : மார் 14, 2024 12:12 AM

பல்லடம் : பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட போஸ்ட் ஆபீஸ் வீதியில், நேற்று காலை, குப்பைக்கான வரிவசூல் செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
இங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆய்வு செய்த அதிகாரிகள், கடந்த ஆண்டு குப்பை வரி வசூல் பாக்கியுள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து, வணிக வளாக உரிமையாளர் பொதுமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வணிக வளாக உரிமையாளர்கள் கூறியதாவது:
குப்பைக்கான வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியர்களுடன் வந்த பொறியாளர் சுகுமார், கடந்த ஆண்டு குப்பை வரி, 14 ஆயிரம் ரூபாய் ஏன் செலுத்தவில்லை என்று கேட்டார். வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வந்தே, 6 மாதங்கள் தான் ஆகிறது. நாங்கள் ஏன் கடந்த ஆண்டுக்கான குப்பை வரி செலுத்த வேண்டும் என்று கேட்டதற்கு, கட்டடத்தின் முன் பகுதியில் விதிமுறை மீறி படிக்கட்டு கட்டியதை இடித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். எதிர்த்துக் கேள்வி கேட்ட எங்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினர். கடந்த ஆண்டுக்கான குப்பை வரியை கேட்டதுடன், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, அதிகாரிகள்- வணிக வளாக உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கண்டு அப்பகுதியில் கூடிய பொதுமக்கள், அதிகாரிகளை கண்டித்து பேசினர்.
இதனால், அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர். பொதுமக்கள் அளித்த புகார் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்

