/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரம்; கலெக்டர் முன்னிலையில் பேச்சு நடத்த முடிவு

ADDED : அக் 24, 2024 11:56 PM
திருப்பூர் : பொங்குபாளையம் பாறைக்குழியில் குப்பை கழிவுகள் கொட்டும் பிரச்னை குறித்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. அடுத்த கட்டமாக கலெக்டர் முன்னிலையில் பேச்சு நடத்தப்படவுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் வாகனங்கள் மூலம் கொண்டு சென்று, பொங்குபாளையம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத, அரசுக்குச் சொந்தமான பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்படுகிறது. இந்த குழியில் தான் பொங்குபாளையம் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் தற்போது கொட்டப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதியிலிருந்து வரும் கழிவுகளை அங்கு கொட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, 3 நாள் அவகாசம் கேட்டு குப்பைகழிவுகள் அங்கு கொட்டப்பட்டது.
குப்பை கொட்டும் பிரச்னைக்கு எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், இது குறித்து அமைதிப் பேச்சு நடத்தி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் முன்னிலையில், எதிர்ப்பு தெரிவித்த அமைப்பினர், மாநகராட்சி அலுவலர்கள், மாசுக் கட்டுப்பாடு வாரியம், கனிம வளத்துறையினர் கலந்து கொண்டனர்.
இறுதியில், பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. அடுத்த கட்டமாக, கலெக்டர் முன்னிலையில் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.