/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கணக்கில் வராத பணம் பறிமுதல்; சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு
/
கணக்கில் வராத பணம் பறிமுதல்; சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு
கணக்கில் வராத பணம் பறிமுதல்; சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு
கணக்கில் வராத பணம் பறிமுதல்; சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு
ADDED : அக் 25, 2024 06:58 AM
திருப்பூர் : அவிநாசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத, 1.84 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, சார்-பதிவாளர் வெங்கிடசாமி உள்பட ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி தலைமையிலான போலீசார், அவிநாசியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். ஐந்து மணி நேரம் நடந்த சோதனையில், சார்-பதிவாளர் வெங்கிடசாமி உட்பட, ஆறு பேரிடம் இருந்து கணக்கில் வராத, 1.84 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.பணம் பறிமுதல் தொடர்பாக சார்-பதிவாளர் வெங்கிடசாமி, 56 மற்றும் பத்திர எழுத்தர், பத்திர எழுத்து அலுவலகம் நடத்தி வருபவர் உள்பட, ஆறு பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.