/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டாசுக் குப்பைகள் மாநகராட்சிக்கு நெருக்கடி
/
பட்டாசுக் குப்பைகள் மாநகராட்சிக்கு நெருக்கடி
ADDED : அக் 30, 2024 08:54 PM
திருப்பூர் ;திருப்பூரில் 60 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளைக் கொட்ட, மாநகராட்சி குப்பைக்கிடங்கு கிடையாது. ஆங்காங்கே உள்ள பாறைக்குழியில் கொட்டப்படுகிறது. பாறைக்குழிகள் பல்வேறு இடங்களில் நிரம்பி வழிந்ததால், அடுத்தடுத்த பாறைக்குழிகளை தேடி அதிகாரிகள் ஓடி வருகின்றனர்.
முதலிபாளையத்தில் பயன்படுத்தப்படாத கல்குவாரியில் குப்பை கொட்டப்பட்டது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்காலிகமாக பேச்சு நடத்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்தில் உள்ள கைவிடப்பட்ட பாறைக்குழியை தேர்வு செய்து, அங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்களிடம் மேயர் தினேஷ்குமார் நேரில் சென்று சமரசம் செய்துவைத்தார்.
ஆயுத பூஜையின் போது சேகரமான குப்பைகளைச் சேகரித்து கொட்டுவதற்கே ஒரு வாரத்துக்கு மேலானது. தற்போது தீபாவளியையொட்டி, பட்டாசுக் குப்பைகளும் டன் கணக்கில் சேரும். இதை மாநகராட்சி நிர்வாகம் எவ்வாறு சேகரித்து கொட்டப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பட்டாசுக்குப்பைகளும், மாநகராட்சிக்கு நெருக்கடியாய் அமையும்.
நிரந்தரமாக திடக் கழிவு மேலாண்மையை பின்பற்றும் விதமாக ஒருங்கிணைந்த குப்பை கொட்டும் இடத்தை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில், மாநகராட்சி நிர்வாகத்தினர் உள்ளனர்.

