/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒன்றிய அலுவலக புதிய கட்டட பணிகள் துரிதப்படுத்த எதிர்பார்ப்பு
/
ஒன்றிய அலுவலக புதிய கட்டட பணிகள் துரிதப்படுத்த எதிர்பார்ப்பு
ஒன்றிய அலுவலக புதிய கட்டட பணிகள் துரிதப்படுத்த எதிர்பார்ப்பு
ஒன்றிய அலுவலக புதிய கட்டட பணிகள் துரிதப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : செப் 22, 2025 11:05 PM

உடுமலை:
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. அதற்கான ஒன்றிய அலுவலகம் தளி ரோடு மேம்பாலம் அருகில் இருந்தது. இந்த அலுவலக கட்டடம் 60 ஆண்டுகளையும் கடந்து விட்டதால், அவற்றை அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி பழைய அலுவலகத்தை அப்புறப்படுத்துவதற்கு, 5 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடும், புதிய அலுவலகம் கட்டுவதற்கு, 5 கோடியே 90 லட்ச ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழைய கட்டடத்தை இடித்த பின்னர், புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் மே மாதம் துவக்கப்பட்டது. தற்போது உடுமலை ஒன்றிய நிர்வாக அலுவலகம், நகராட்சி பழைய கட்டடத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது.
கிராம மக்கள், தற்போதுள்ள தற்காலிக அலுவலகம் வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் அருகே பஸ் ஸ்டாப் இல்லாததால், சிறிது துாரம் செல்ல வேண்டும்.
பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவதற்கு, ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள், தற்போது உள்ள தற்காலிக அலுவலகத்துக்கு வர தயங்குகின்றனர். பழைய அலுவலகம் அருகில், பஸ் ஸ்டாப் இருப்பதால் எளிதில் சென்று வந்தனர். புதிய ஒன்றிய அலுவலகம் கட்டும் பணிகளை விரைவில் நிறைவு செய்து, செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.