ADDED : டிச 30, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், காங்கயம் ரோடு, படியூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோடு தொட்டிய பாளையம் அருகே ரோடு பராமரிப்பு பணி நடக்கிறது.
ஜல்லிக்கற்கள், மண் கொட்டப்பட்டு ஒரு கி.மீ., துாரம் புழுதிப் படலமாக மாறி உள்ளது. வாகன ஓட்டிகள் புழுதி படலத்தால் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிர்களில் புழுதி படிந்து கால்நடைத் தீவனத்திற்கு உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

