/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பால் வீணாகியது குடிநீர்
/
குழாய் உடைப்பால் வீணாகியது குடிநீர்
ADDED : பிப் 27, 2024 11:38 PM

உடுமலை:உடுமலையில், குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, பெருமளவு குடிநீர் வீணாகியது.
உடுமலை நகராட்சி சார்பில், யு.எஸ்.எஸ்., காலனி, வாசவி நகர், ஸ்ரீ ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, குடிநீர் குழாய் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.
நேற்று, யு.எஸ்.எஸ்., காலனி பகுதியில் குழாய் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, தாராபுரம் ரோடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் செல்லும் குழாய், பொக்லைன் வாகனத்தால் உடைக்கப்பட்டது. இதனால், பெருமளவு குடிநீர் வீணாகியதோடு, அப்பகுதியிலுள்ள வீடுகள், தெரு மற்றும் ரோடுகளில் 'ஆறாக' ஓடியது. இதனால், பொதுமக்கள் பாதித்தனர்.
இதனையடுத்து, நகராட்சி அதிகாரிகள், ஓடையின் குறுக்கே வரும் பிரதான குழாயை உடைத்து, ஓடை வழியாக குடிநீரை வெளியேற்றினர். இதனால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது.
மேலும், இப்பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரோடுகளில் குழி தோண்டி பணி மேற்கொள்ளும் போது, கவனமாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

