/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பக்தி செலுத்த எல்லை, மொழிகள் கிடையாது'
/
'பக்தி செலுத்த எல்லை, மொழிகள் கிடையாது'
ADDED : டிச 17, 2025 06:44 AM

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில், ஸ்ரீவீர ஆஞ்சநேய பக்தர்கள் பேரவை சார்பில், திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நேற்று முதல் துவங்கியது.
மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு, தினமும் காலை 7:00 முதல் 8:00 மணி வரை திருப்பாவை உபன்யாசம், உஞ்ச விருத்தி மற்றும் மாலை 6:30 முதல் 8:30 மணி வரை, திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:
பக்தி எல்லோருக்கும் பொதுவானது அவரவர் குல தொழில் செய்ய மட்டுமே ஜாதி தேவை. பக்தி மார்க்கத்தில் எப்போதும் ஜாதி, மதம் வழிபாட்டிற்கு கிடையாது பக்தி இருக்கும் குழந்தைகளிடம் தான் பெரியோர்களை மதிக்கும் தன்மை, பக்குவம் வளரும், இருக்கும். தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் யாருக்கும் அஞ்ச மாட்டார்கள். உண்மையான பக்தி இருப்பவரிடம் இறைவன் எந்த ரூபத்திலும் உடன் இருந்து அருள் புரிவார். பக்திக்கு எல்லைகள் இல்லை. இறைவனை எந்த மொழியிலும் வழிபடலாம். பக்திக்கு மொழி கிடையாது. குழந்தைகளுக்கு பக்தியை புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஸ்ரீவீர ஆஞ்சநேய பக்தர்கள் பேரவை நிறுவனர் ஈஸ்வரன் வரவேற்றார். சொற்பொழிவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிறைவாக, பக்தர்களின் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

