/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கலுாரில் வேல் வழிபாடு; வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
/
பொங்கலுாரில் வேல் வழிபாடு; வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பொங்கலுாரில் வேல் வழிபாடு; வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பொங்கலுாரில் வேல் வழிபாடு; வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : டிச 26, 2025 02:56 AM

பொங்கலுார்: ''வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்,'' என, திருப்பூரில் நடந்த வேல் வழிபாட்டு நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் பேசினார்.
ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியம், கண்டியன்கோவிலில் உள்ள, அலகுமலை வித்யாலயா பள்ளி வளாகத்தில் வேல் வழிபாடு நடந்தது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். யாக பூஜை, வேலுக்கு அபிஷேகம், மஹா தீபாராதனையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். முன்னதாக, கந்த சஷ்டி கவசம் பாராயணம், திருமந்திரம், கூட்டு வழிபாடு, தென்காசி மாதவி குழுவினரின் வில்லுப்பாட்டு, தீப வழிபாடு நடந்தது.
கோவை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:
வேல் அறிவின் வடிவம். நாட்டுக்காகவும், மக்கள் வளத்துக்காகவும் யாகம் நடக்கிறது. ஹிந்து விழிப்புணர்வு, தேசப்பற்று ஏற்பட வேண்டும். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; நல்ல வெளிச்சம் கிடைக்கும்.
இருண்ட காலத்தில் வேறு மதத்தின் தாக்கம் இருந்தது. மதுரை மண்ணில் அயல் தாக்கம் நிறைந்திருந்தது. நம் மன்னனே அதற்கு ஆட்பட்டார். நம் சமயம், பண்பாடு பற்றி இழுக்கு வந்தால் அதை மீட்க வேண்டும். பண்பாட்டுக்கும், தேசத்துக்கும் உகந்த செயல் வேல் வழிபாடு.
இவ்வாறு அவர் பேசினார்.
காமாட்சிபுரம் ஆதினத்தை சேர்ந்த தம்புரான் சுவாமிகள், ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

