/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊத்துக்குளி ஒன்றியத்தில் ரூ.17 கோடியில் வளர்ச்சிப்பணி
/
ஊத்துக்குளி ஒன்றியத்தில் ரூ.17 கோடியில் வளர்ச்சிப்பணி
ஊத்துக்குளி ஒன்றியத்தில் ரூ.17 கோடியில் வளர்ச்சிப்பணி
ஊத்துக்குளி ஒன்றியத்தில் ரூ.17 கோடியில் வளர்ச்சிப்பணி
ADDED : செப் 27, 2024 12:28 AM
திருப்பூர், : குன்னத்துார் பேரூராட்சி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
சப்-கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், அமைச்சர் சாமிநாதன் இப்பணிகளை துவக்கி வைத்தார். நகர்ப்புற மேம்பாட்டு திட்ட மூலதன மானிய நிதி, 78 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி, மூலதன மானிய நிதி, 1.15 கோடி ரூபாயில் புதிய பேரூராட்சி மன்ற கட்டடம், பள்ளி மூலதன மானிய நிதி, 1.01 கோடியில், பேரூராட்சி, 6வது வார்டில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 6 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி உள்ளிட்ட, 17.71 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
குன்னத்துார் பேரூராட்சி தலைவர் கொமரசாமி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் முத்துசரவணன், பி.டி.ஓ., சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

