/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டெலி பிரஷ்' கேக் லாஞ்ச் காந்தி நகரில் திறப்பு
/
'டெலி பிரஷ்' கேக் லாஞ்ச் காந்தி நகரில் திறப்பு
ADDED : டிச 22, 2025 05:08 AM

திருப்பூர்: திருப்பூர்,அவிநாசி ரோட்டில் தலைமையிடமாகக் கொண்டு டெலி பிரஷ் நிறுவனம் செயல்படுகிறது. ஆஷர் மில் தலைமை கிளை தவிர, மங்கலம் ரோடு, காங்கயம் ரோடு, பி.என்.ரோடு, காலேஜ் ரோடு மற்றும் பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன.
இதன் ஏழாவது கிளை அவிநாசி ரோடு காந்தி நகர், ஈஸ்வரன் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. டெலி பிரஷ் நிறுவனர் குடும்பத்தினர் வரவேற்றனர்.
சிறப்பு தயாரிப்புகளான கேக் வகைகள் உள்ளிட்ட பேக்கரி வகைகள் இங்கு விற்பனையாகிறது. திறப்பு விழா சலுகையாக இன்று 22ம் தேதி வரை, பேக்கரி வகைகளுக்கு 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

