ADDED : டிச 18, 2024 11:04 PM

அவிநாசி; அவிநாசியில், அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அவிநாசியில் நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டல், பேக்கரி, மளிகை, சலுான் உட்பட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தினசரி காய்கறி மார்க்கெட், தாலுகா ஆபீஸ் அருகிலுள்ள சாலையோர காய்கறி சந்தை செயல்படவில்லை.
அத்தியாவசிய தேவையான பால், மருந்து கடைகள் திறந்திருந்தன. அதேபோல், பெரிய கோவிலருகே தேங்காய், பழக்கடை, பூக்கடைகள் செயல்பட்டன.
கடையடைப்பு போராட்டத்துக்கு அ.தி.மு.க., - இ. கம்யூ., - மா.கம்யூ., - வி.சி.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும் முடங்கியது.

