/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தை அமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
/
உழவர் சந்தை அமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : அக் 28, 2024 12:25 AM
உடுமலை: மடத்துக்குளத்தில், மா.கம்யூ., தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் வீரப்பன் தலைமை வகித்தார்.
இதில், மடத்துக்குளம், கணியூர், சங்கராமநல்லூர் பேரூராட்சியில் ஊராக வேலை திட்டத்தை அமல்படுத்தவும், கொமரலிங்கம் பேரூராட்சியில் ஊராக வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில், அனைத்து ரயில்களும் நின்று செல்லவும், அரசு மருத்துவமனையில், வசதிகளை மேம்படுத்தவும், அவசர சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும்.
கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர் வழங்கவும், அமராவதி சர்க்கரை ஆலையை இயக்கவும், மடத்துகுளத்தில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்.
மேலும், மடத்துக்குளத்தில் மகளிர் காவல்நிலையம் அமைக்கவும், கொழுமம், கணியூர் மடத்துக்குளம் பகுதியில் நிரந்தர அரசு நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநிலக்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மதுசூதனன், ராஜகோபால், ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தாலுகா செயலாளராக வடிவேல் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

