/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன்கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கணும்
/
ரேஷன்கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கணும்
ரேஷன்கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கணும்
ரேஷன்கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கணும்
ADDED : அக் 03, 2024 07:50 PM
உடுமலை:
ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவு திட்டத்தில், தேங்காய் எண்ணெயை மானிய விலையில் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது:
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, கடந்த ஆக., 8 அன்று, மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தேங்காய் உடைக்கும் போராட்டம் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டது.
தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக, வினியோகிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பாமாயிலை தடை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களிலும் ஈடுபட்டோம்.
இதன் பயனாக, சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதால், தற்போது, எண்ணெய் வித்துக்களின் விலை உயர்ந்து கொண்டுள்ளது. இதேபோல், தேங்காய் விலையும் தற்போது ஏறுமுகத்தில் உள்ளது.
நான்கு மாவட்டங்களில், பரிசோதனை முயற்சியாக, தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் வினியோகிப்பதாக, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இன்று வரை இந்த அறிவிப்பு அமல்படுத்தப்படவில்லை.
எனவே, உடனடியாக ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவு திட்டத்தில், தேங்காய் எண்ணெயை மானிய விலையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

