/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எர்ணாகுளம் - பெங்களூரு ரயில் இயக்கத்தில் மாற்றம்
/
எர்ணாகுளம் - பெங்களூரு ரயில் இயக்கத்தில் மாற்றம்
ADDED : டிச 23, 2024 07:06 AM
திருப்பூர் : எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் இயக்கம் ஜன., 7, 8, 9ம் தேதிகளில் மாற்றப்படுகிறது.
ஒசூர் யார்டில், சிக்னல் மாற்றம், தண்டவாள பராமரிப்பு மற்றும் மேலாண்மை பணி நடைபெற உள்ளதால், எர்ணாகுளம் - பெங்களூரு (எண்:12678) இன்டர்சிட்டி ரயில் இயக்கம் வரும் ஜன., 7, 8ம் தேதிகளில் மாற்றப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து காலை, 9:10க்கு புறப்படும் ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு கடந்த பின், சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை, பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பையப்பனஹள்ளி வழியாக பெங்களூரு செல்லும்; வழக்கமாக வழித்தடமான, தர்மபுரி, ஓசூர் வழியாக இயங்காது.
மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் புறப்படும் ரயில்(எண்: 12677) ஜன., 8, 9 ம் தேதிகளில் ஓசூர், தர்மபுரி செல்லாமல், குப்பம் - ஜோலார்பேட்டை - சேலம் மார்க்கமாக இயங்கும்.

