/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறந்த மகளிர் குழுக்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
சிறந்த மகளிர் குழுக்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு
சிறந்த மகளிர் குழுக்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு
சிறந்த மகளிர் குழுக்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஏப் 17, 2025 09:59 PM
உடுமலை ;திருப்பூர் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில், சிறப்பாக செயல்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு, பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருது பெறுவதற்கு விண்ணப்பிக்க அடிப்படையாக, குறைந்தபட்சம் சுய உதவிக்குழு துவக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஒரு முறையாவது வங்கிக்கடன் பெற்று, முழுவதும் திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.
நிபந்தனைகளுக்குட்பட்டு, ஊரக மற்றும நகர்ப்புற பகுதிகளில் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்., 30க்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் உள்ள, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

