தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வரப்பிரசாதம்! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்

பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வரப்பிரசாதம்! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்

பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வரப்பிரசாதம்! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்


UPDATED : ஜூலை 27, 2025 07:48 AM

ADDED : ஜூலை 27, 2025 07:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2025 07:48 AM ADDED : ஜூலை 27, 2025 07:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் : 'பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவானது, திருப்பூருக்கு கிடைத்த வரப்பிரசாதம்' என்று, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், பிரிட்டன் தவிர்க்க முடியாத நாடாக உள்ளது; ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருந்த போதும் சரி, தனி நாடாக மாறிய பின்னரும் சரி, பிரிட்டனுடனான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வங்கதேசம், வரிச்சலுகை பெற்று வந்ததால், பிரிட்டன் ஆர்டர்களை அதிகம் பெற்றது; இந்தியாவுக்கும், 12 சதவீத வரிசலுகை கிடைக்கும் என்பதால், ஜவுளி ஏற்றுமதியில் புதிய மாற்றம் உருவாகும். குறிப்பாக, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி இருமடங்கு உயரும்; ஒட்டுமொத்த திருப்பூர் ஏற்றுமதியில், 15 சதவீத வளர்ச்சி கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us