sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சிக்கல்: துண்டிக்கப்படும் குழாய்கள் - தடை படும் நீர் வினியோகம்

/

 அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சிக்கல்: துண்டிக்கப்படும் குழாய்கள் - தடை படும் நீர் வினியோகம்

 அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சிக்கல்: துண்டிக்கப்படும் குழாய்கள் - தடை படும் நீர் வினியோகம்

 அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சிக்கல்: துண்டிக்கப்படும் குழாய்கள் - தடை படும் நீர் வினியோகம்


ADDED : நவ 29, 2025 08:09 AM

Google News

ADDED : நவ 29, 2025 08:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக நீர் வினியோக முறை வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் சார்ந்துள்ள பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு கூடுதல் நீர் வர வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில், பொதுமக்கள், குழாய் இணைப்பை துண்டித்து விடுகின்றனர்'' என, நீர்வளத்துறையினர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரம், 'திட்டத்துடன் இணைக்கப்பட்ட பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு நீர் வினியோகம் தடைபடுகிறது' என்ற புகார் அவ்வப்போது எழுகிறது.

நவீன தொழில்நுட்பம்

இத்திட்டத்தில், குழாய் இணைப்பு மற்றும் நீர் வினியோக முறை என்பது, 'சென்சார்' தொழில்நுட்ப அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் பலர், தங்கள் குளம், குட்டைகளுக்கு கூடுதலாக நீர் வர வேண்டும்; அல்லது தடைபடாமல் நீர் வர வேண்டும் என்ற எண்ணத்தில், குழாய் இணைப்பை துண்டித்து விடுகின்றனர்; இதனால், குளம், குட்டைகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட அளவில் நீர் வினியோகிக்க முடிவதில்லை என, நீர்வளத்துறையினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

சமீபத்தில், அன்னுார் அருகே கணுவக்கரையில் நடந்த அத்திக்கடவு - -அவிநாசி திட்ட நீர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இது உறுதியானது. கூட்டத்தில் பேசிய, அத்திக்கடவு- அவிநாசி திட்ட உதவி செயற்பொறியாளர் பிரபா, ''குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பயனாளிகள் பாதுகாக்க வேண்டும். சிலர் தெரிந்தோ தெரியாமலோ 'போல்ட் நட்'களை கழற்றி விடுவதால், நீரேற்று நிலையத்தில் மின் மோட்டாரை நிறுத்த வேண்டியுள்ளது; இதனால் நீர் வினியோகம் தடைபடுவதால், அடுத்தடுத்த குளம், குட்டைகளுக்கு தண்ணீர் செல்வதில்லை,'' என்று ஆதங்கப்பட்டார்.

1,500 முறை குழாய் உடைப்பு

-----------------------

கூட்டத்தில், 'எல் அண்ட் டி' நிறுவன அதிகாரிகள் பேசுகையில், 'அத்திக்கடவு திட்டத்தில், 850 கி.மீ., துாரம் பணி முழுமையாக முடிந்துள்ளது; 1,500 முறை குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது; 80 முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மின்தடை ஏற்பட்டாலும், அதன் பிறகு நீர் குளங்களை சென்றடைய பல மணி நேரமாகும்; பல இடங்களில் உபகரணங்கள் திருடு போகின்றன,' என பேசினர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மூலம் நீர் வினியோகிக்கப்படாததால், தெக்கலுார் குளம் நீரின்றி காணப்படுகிறது.

அதிகாரிகள் எண்ணம் 'அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினரின் பல ஆண்டு கால போராட்டத்தின் விளைவாக திட்டம் வந்தது. திட்டம் வந்த பின், போராட்டக் குழுவினர், ஆதரவு குழுவாக, தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது திட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அதை பாதுகாக்க வேண்டியது பொறுப்பையும் ஏற்று, அத்திக்கடவு பாதுகாப்பு குழுவினராக தங்களின் செயல்பாட்டை வகுத்து கொள்ள வேண்டும்' என்கின்றனர் அதிகாரிகள். ---








      Dinamalar
      Follow us