/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டரி கொடையாளர்களுக்கு பாராட்டு; பன்னாட்டு ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்பு

ADDED : செப் 23, 2025 06:16 AM

திருப்பூர்; ரோட்டரி மாவட்டம் எண்: 3203ல், 99 கோடி ரூபாய் மதிப்பிலான 60 மக்கள் நல திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பங்களிப்பு செய்துள்ள பெருங்கொடையாளர்களுக்கான பாராட்டு விழா, திருப்பூர் பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற்றது. ரோட்டரி கவர்னர் தனசேகரன் தலைமை வகித்தார். செலிப்ரேஷன் ரோட்டரி தலைவர் டாக்டர் சதீஷ்குமார் வரவேற்றார்.
மாவட்ட டி.ஆர்.எப். சேர்மன் சண்முகசதீஷ் அறிக்கை வாசித்தார். பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை தலைவர் ஹோல்கர் நாக், டிரஸ்ட்டி பரத் பாண்டியா, இயக்குநர் முருகானந்தம், முன்னாள் தலைவர் ஸ்ரீலங்கா ரவீந்திரன், இதயம் நல்லெண்ணெய் நிர்வாக இயக்குநர் முத்து அண்ணாச்சி வாழ்த்துரை வழங்கினர்.
ரோட்டரி மாவட்ட பயிற்றுநர் இளங்குமரன், முன்னாள் ரோட்டரி கவர்னர்கள் நாராயணசாமி, சிவசங்கரன், டாக்டர் சுந்தர்ராஜன், டாக்டர் சுரேஷ்பாபு, கவர்னர் பூபதி (தேர்வு) ஆகியோர் ரோட்டரி சேவை திட்டங்கள் குறித்து பேசினர். மாவட்ட பொது செயலாளர் சிவப்பிரகாஷ், நிகழ்ச்சி சேர்மன் மெல்வின் பாபு ஆண்டனி, செயலாளர் வெங்கடேஷ், கோ-சேர்மன் சிவபாலன், பதிவு சேர்மன் ரத்தினசாமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.