/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆனந்தம் ஆர்ப்பரிக்கும் அமராவதி அணை
/
ஆனந்தம் ஆர்ப்பரிக்கும் அமராவதி அணை
ADDED : செப் 26, 2024 11:32 PM
அமராவதி அணை சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் உற்பத்தியாகும், பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் காட்டாறுகளில் இருந்து வரும் நீர் அமராவதி அணையில் சங்கமிக்கிறது.
அணையில், 460 மீட்டர் நீளத்துக்கு, பல்வேறு வகையான மரங்கள், செடிகளுடன் கூடிய பூங்கா அமைந்துள்ளது. பசுமை குடில்கள், நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணியரை கவரும் வகையில், அமைந்துள்ள அணைப்பூங்காவுக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர். அணையில் படகு சவாரி உள்ளது. இன்ஜின் பொருத்திய படகில் உற்சாகமாக சுற்றி வரலாம்.
உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம் மறையூர், மூணாறு வழித்தடத்தில் அமைந்துள்ளதால், அதிகளவு சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்த வழித்தடம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால், வழி நெடுகிலும் யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகளையும் காணலாம்.

