/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாற்றுக்கூட விட முடியாத சூழ்நிலை; சீரான தண்ணீர் விடக்கோரி எல்.பி.பி., பாசன விவசாயிகள் உதவி செயற்பொறியாளரிடம் மனு

ADDED : செப் 26, 2024 06:10 PM

காங்கேயம்:சென்னிமலை பாசன பிரிவுக்கு உள்பட்ட பசுவபட்டி மற்றும் எக்கட்டாம்பாளையம் கிராம எல்.பி.பி., பாசன விவசாயிகள் காங்கேயம் துணை கோட்டம் கீழ்பவானி வடிநில உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கீழ்பவானி அணையிலிருந்து ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையிலிருந்து அன்றாட வினாடிக்கு 2300 கன அடி தண்ணீர் கொடுக்கப்படுகிறது. 74/2 அரச்சலூரில் இருந்து விரிவாக்க கால்வாய்க்கு தேவையான முழு கொள்ளளவு தண்ணீரும் பெறப்படுகிறது. முழு கொள்ளளவு தண்ணீரும் கொடுக்கப்படுகிறது. இவைகள் எல்லாம் நீர்வளத் துறை அன்றாடம் வெளியிடும் அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. இவ்வாறு இருக்கும் போது எங்கள் பகுதி ஆயகட்டத்தைச் சேர்ந்த சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் இன்னும் நாற்றுக்கூட விட முடியாத சூழ்நிலை உள்ளது.
40 நாட்கள் கடந்து விட்டது இனிமேல் நாற்று விட்டு நடவு செய்வது எவ்வளவு நெருக்கடி என்பதை நீர்வள துறை உணர வேண்டும். எனவே பாசனப்பகுதியில் உள்ள நிலங்களுக்கு 60 டியூட்டி என்ற கணக்கிட்டு தண்ணீர் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். ஆயக்கட்டு நிலங்களின் பாசன உரிமையை பாதுகாப்பது நீர்வளத் துறையின் கடமையும் பொறுப்பும் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.