ADDED : அக் 16, 2024 09:05 PM
உடுமலை: தேசிய நெடுஞ்சாலையில், மழைக்காலங்களில், கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டுநர்கள் பாதிப்பது தொடர்கதையாகியுள்ளது.
உடுமலை நகரின் மையப்பகுதியில், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலைக்குரிய மழை நீர் வடிகால் அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. மழைக்காலத்துக்கு முன் துார்வாருவதும் இல்லை.
இதனால், பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரையும், தீயணைப்பு நிலையத்தில் இருந்து நகர எல்லை வரை, மழைக்காலங்களில், ரோட்டில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது. மழை பெய்த உடன், ரோட்டில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பொள்ளாச்சி நோக்கி செல்லும் வாகன ஓட்டுநர்கள், நகர எல்லை வரை சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மழை நீர் வடிகால்களை உடனடியாக துார்வார, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

