/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெட்டி கடையில் திருடியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
/
பெட்டி கடையில் திருடியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
ADDED : பிப் 20, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, தாடிக்காரன் முக்கு பகுதியில் உள்ள பெட்டி கடையில், 2023 நவ., 16ம் தேதி இரவு மேற்கூரையை பிரித்து கடையில் இறங்கிய திருநெல்வேலியை சேர்ந்த துளசி மணி, 37 என்பவர்,4 ஆயிரம் ரூபாயை திருடி சென்றார்.
வழக்குப்பதிவு செய்த சென்ட்ரல் போலீசார் அவரை கைது செய்தனர். வழக்கில், அவருக்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஜே.எம்: 2 கோர்ட் மாஜிஸ்திரேட் பழனிக்குமார் தீர்ப்பளித்தார்.

