/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல் தலைமுறை வாக்காளர் 30 ஆயிரம் பேர் 'ரெடி'
/
முதல் தலைமுறை வாக்காளர் 30 ஆயிரம் பேர் 'ரெடி'
ADDED : மார் 18, 2024 11:58 PM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், 30,070 இளம் வாக்காளர்கள், முதல்முறையாக, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க தயாராக உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, ஆண்டுதோறும் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, இந்திய தேர்தல் கமிஷன், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்குப்பின் இதுவரை, மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில், இளம் வாக்காளர்கள் 30,070 பேர் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், முதல் முறையாக, வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க ஆர்வமாக உள்ளனர். 18 முதல் 19 வயதுள்ள, முதல்முறை ஓட்டளிக்க உள்ள இளம் வாக்காளர் விவர பட்டியலை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தயார் படுத்தியுள்ளனர்.
ஓட்டுப்பதிவின் முக்கியத்துவம்; இ.வி.எம்.,-ல் ஓட்டுப்பதிவு செய்வது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளம் வாக்காளர் அனைவரையும் தவறாமல் ஜனநாயக கடைமையாற்ற செய்ய வேண்டியது தேர்தல் பிரிவினரின் கடமை.

