/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவிலான 2வது மாநாடு
/
ரேவதி செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவிலான 2வது மாநாடு
ரேவதி செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவிலான 2வது மாநாடு
ரேவதி செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவிலான 2வது மாநாடு
ADDED : ஏப் 08, 2025 06:25 AM

திருப்பூர்; அவிநாசியில் உள்ள ரேவதி செவிலியர் கல்லுாரியில், ஆராய்ச்சி புலமையுடன் செவிலியர் சிறப்பை வளர்ப்பது என்ற தலைப்பில், 2வது தேசிய அளவிலான மாநாடு நடந்தது.
தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவ கவுன்சில் அனுமதியுடன் நடந்த மாநாட்டில் தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து, 140 பிரதிநிதிகள் மற்றும் 410 செவிலிய மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ரேவதி கல்வி நிறுவன நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, துணை அறங்காவலர்கள் ரேவதி, டாக்டர் ஹரிபிரணவ் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
கல்லுாரி முதல்வர் டாக்டர் அகல்யா, தலைமை வகித்தார். வல்லுநர்கள் பேசினர்.
ஆராய்ச்சி கட்டுரைகள் தொடர்பான போஸ்டர் போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. துணை முதல்வர் பேராசிரியர் இளங்கோ, நன்றி கூறினார்.