/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நூறு நாள் திட்டத்தில் 1.12 லட்சம் தொழிலாளர்; தாமதமின்றி சம்பளம் வழங்க எதிர்பார்ப்பு

ADDED : ஜன 01, 2024 11:16 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 1.12 லட்சம் தொழிலாளர்கள் நுாறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 265 கிராம ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கால்வாய் வெட்டுவது, ரோட்டோரம் உள்ள புல், புதர்களை வெட்டி சுத்தம் செய்வது உள்ளிட்ட மண் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு தினக்கூலியாக, 294 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பினும், அவர்கள் செய்யும் வேலைக்கேற்ப, 260 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.பிரதி புதன்தோறும், நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
கடந்த ஓராண்டாக, இவர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. 4, 5 வாரங்களுக்கான சம்பளம் ஒரே சமயத்தில் விடுவிக்கப்படுகிறது.
இதனால், இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கணக்கெடுப்புப்படி, 1 லட்சத்து 12 ஆயிரத்து 430 தொழிலாளர்கள் நுாறு நாள் திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்கள், 1.07 லட்சம் குடும்பங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.