/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா! களம் இறங்கிய கம்யூ., வாரிசு
/
நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா! களம் இறங்கிய கம்யூ., வாரிசு
நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா! களம் இறங்கிய கம்யூ., வாரிசு
நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா! களம் இறங்கிய கம்யூ., வாரிசு
ADDED : ஏப் 02, 2024 11:57 PM

திருப்பூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் களம் காண்கிறார், தற்போதைய எம்.பி., சுப்பராயன்.அவருக்கு ஆதரவாக அவரது மகன் பாரதி, 45 'தனி ரூட்' போட்டு பிரசாரம் துவங்கியுள்ளார். நண்பர்கள் சிலரை இணைத்து, 'நவீன மனிதர்கள்' அமைப்பை உருவாக்கியுள்ள அவர், திருப்பூர் தொகுதியில் பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்வதாக அறிவித்துள்ளார்.
சுப்பராயன் இதுவரை 8 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால் இது வரை ஒருமுறை கூட அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாத அவரது மகன் பாரதி, தற்போது முதல் முறையாக பிரசாரக்களம் இறங்கியுள்ளார்.
''தந்தையின் பிரசாரக் கூட்டத்தில் கூட தான் இதுவரை கலந்து கொண்டதில்லை; வேடிக்கை பார்க்க கூட போனதில்லை,'' என, அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை தன் தந்தையின் பிரசாரப் பேச்சைக்கூட கேட்டிராத மகன் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் துவங்கியுள்ளது, பல தரப்பையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதேசமயம், பல்வேறு கட்சிகளைப்போன்றே, கம்யூனிஸ்ட் கட்சியிலும், வாரிசுகள் களமிறங்க துவங்கிவிட்டனர். சுப்பராயனின் வாரிசு, இதற்கு எடுத்துக்காட்டு என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.

