/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு கூடுதலாக்க வலியுறுத்தல்
/
உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு கூடுதலாக்க வலியுறுத்தல்
உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு கூடுதலாக்க வலியுறுத்தல்
உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு கூடுதலாக்க வலியுறுத்தல்
ADDED : மார் 22, 2024 10:29 PM
உடுமலை;மலைவாழ் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளிகளில், அரசின் நிதி ஒதுக்கீட்டை கூடுதலாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
மலைகிராம குழந்தைகளுக்கு சிறந்த கல்வி அளிக்கவும், அவர்களின் வாழ்க்கை முறையால், அடிப்படை கல்வி பாதிப்படையாமல் இருக்கவும், உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்படுகின்றன.
உண்டு உறைவிடப்பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, குழந்தைகள், அங்கேயே தங்கி படிக்கின்றனர். இக்குழந்தைகளுக்கு, ஒரு பராமரிப்பாளரும், ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியரும் நியமிக்கப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், ஐந்து உண்டு உறைவிடப்பள்ளிகள் உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ளன.
ஒவ்வொரு பள்ளியிலும், 50 குழந்தைகள் வரை பராமரிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில், 18 மலைகிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும், குழந்தைகளை, பராமரிப்பதற்கென, ஒரு மாணவருக்கு, தலா, 100 ரூபாய் வழங்கப்படுகிறது.
அதில், அவர்களுக்கான முடி திருத்தம் செய்வது, குளியல் 'சோப்பு', சலவை சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொருட்கள் விலை உயர்வு தொடர்ந்து கொண்டிருந்தாலும், உண்டு உறைவிட பள்ளிகளில் வழங்கப்படும் குழந்தைகள் பராமரிப்பு நிதியில் பயனுள்ள மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.
பல ஆண்டுகளாக பராமரிப்பு நிதி, 50 ரூபாயாகவே இருந்தது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சில உறைவிடப்பள்ளிகளில், ஆசிரியர்களின் சுயசெலவில், குழந்தைகளுக்கான இந்த தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.
மாநிலம் முழுவதும் இதே நிலைதான் என்பதால், பராமரிப்பு தொகையை அதிகரிப்பது குறித்து கோரிக்கை வைத்தாலும் பலனில்லை என, ஆசிரியர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு வழங்கப்படும், பராமரிப்பு தொகையும்,பெற்றோர் தங்களின் பராமரிப்பு இல்லாவிட்டாலும், அதை ஈடுசெய்யும் வகையில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் இருக்கும் என நம்புகின்றனர்.
ஆனால், அரசு இன்னும் அக்குழந்தைகளுக்கான நிதிஒதுக்கீட்டில், பற்றாக்குறை நிலையை தொடர்வதால், அதிருப்திக்குள்ளாகின்றனர்.
புதிய கல்வியாண்டில், மாணவர்களுக்கான பராமரிப்பு நிதியை அதிகரித்து வழங்குவதற்கு, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

