/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதய் எக்ஸ்பிரஸ் திருப்பத்துாரில் நிற்கும்
/
உதய் எக்ஸ்பிரஸ் திருப்பத்துாரில் நிற்கும்
ADDED : மே 24, 2024 11:16 PM
திருப்பூர்: கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் உதய் எக்ஸ் பிரஸ் (எண்:22666) மறு அறிவிப்பு வரும் வரை திருப்பத்துாரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தினசரி காலை, 5:45 மணிக்கு உதய் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன்களில் நின்று மதியம், 12:40 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கமாக மதியம், 2:15 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு, இரவு, 9:00 மணிக்கு திருப்பூரை கடந்து கோவை செல்கிறது.
இந்த ரயில் கடந்த மார்ச், 11ம் தேதி முதல் சேலம் - குப்பம் இடையே திருப்பத்துார் ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நின்று பயணித்து வந்தது. முன்பதிவு பயணிகள், ரயில் விட்டு இறங்குவோர், ரயிலில் ஏறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மறுஅறிவிப்பு வரும் வரை இருமார்க்கத்திலும் திருப்பத்துாரில் ரயில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

