/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பையுடன் வந்த டிராக்டர் சிறைப்பிடித்த பொதுமக்கள்
/
குப்பையுடன் வந்த டிராக்டர் சிறைப்பிடித்த பொதுமக்கள்
குப்பையுடன் வந்த டிராக்டர் சிறைப்பிடித்த பொதுமக்கள்
குப்பையுடன் வந்த டிராக்டர் சிறைப்பிடித்த பொதுமக்கள்
ADDED : மே 18, 2024 12:12 AM

பல்லடம்;பல்லடம் ஒன்றியம், அருள்புரம் - உப்பிலிபாளையம் ரோட்டில், கரைப்புதுார் ஊராட்சியின் குப்பைகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் அண்ணாதுரை, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், குப்பைகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும், குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், நேற்று குப்பையுடன் வந்த டிராக்டரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
டிரைவரிடம் கேட்டதற்கு, குன்னாங்கல்பாளையம் தனியார் நிறுவனத்தில் இருந்து குப்பைகள் எடுத்து வரப்படுவதாக கூறினார். இதையடுத்து, பொதுமக்கள் டிராக்டர் டிரைவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே குவிந்து கிடக்கும் குப்பைகளையே அகற்ற வழி இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. ஐகோர்ட் உத்தரவு எப்போது அமல்படுத்தப்படும் என்று தெரியவில்லை. அடுத்தடுத்து குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்' என்றனர். இச்சம்பவத்தால், இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

