/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுங்கு விற்பனை ஜோர் விலையும் சற்று அதிகம்
/
நுங்கு விற்பனை ஜோர் விலையும் சற்று அதிகம்
ADDED : ஏப் 01, 2024 01:53 AM

உடுமலை;கோடையின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரிப்பதால், நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.
நடப்பாண்டில், பிப்., மாதம் முதலே கோடையின் தாக்கம் அதிகரித்ததால், மக்கள் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். உடல் சூட்டை தணிக்கும் பழங்கள், பழச்சாறு குடிப்பதையும் மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதில் பனை நுங்கும் முக்கியமானது. விலை ஏற்றம் காரணமாக, பலரின் விருப்பமும், மோர் மற்றும் தர்பூசணிகளின் பக்கமே இருந்தது. இம்மாதமும், வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வாட்டிக்கொண்டிருக்கிறது.
உடல் குளர்ச்சியை பராமரிக்க, பனை நுங்குக்கு அதிக பங்குள்ளது. இதனால் மீண்டும் பனை நுங்கு மற்றும் பதநீர் அருந்துவதற்கு மக்கள் தேடிச்செல்கின்றனர்.
பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, பனை நுங்கு இப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே கேட், தளி ரோடு பகுதிகளில் விற்பனையாகிறது.
ஒரு நுங்கு, பத்து ரூபாயாகவும், பதநீர், 25 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல், மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

