/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எஸ்.டி., பட்டியலில் படுகர்' கூட்டமைப்பு எதிர்பார்ப்பு
/
'எஸ்.டி., பட்டியலில் படுகர்' கூட்டமைப்பு எதிர்பார்ப்பு
'எஸ்.டி., பட்டியலில் படுகர்' கூட்டமைப்பு எதிர்பார்ப்பு
'எஸ்.டி., பட்டியலில் படுகர்' கூட்டமைப்பு எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 02, 2024 10:42 PM
திருப்பூர்:திருப்பூரில், படுகர் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்கள், வேலை வாய்ப்பு, உயர் கல்வி உட்பட காரணங்களுக்காக, பிற மாவட்டங்களுக்கு இடம் பெயர்கின்றனர். படுகர் சங்கங்களையும் நடத்தி வருகின்றனர். படுகர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், திருப்பூரில் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய தலைவராக பொப்ளி, செயலாளராக சுப்ரமணியன், துணை தலைவர்களாக ஜான்குமார், சரவணன், பொருளாளராக கணபதி, துணை செயலாளர்களாக பில்லன், சுப்ரமணி, ராஜ்குமார், ஜெகதீஷ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.'படுகர் இன மக்களை எஸ்.டி., பட்டியலில் இணைக்க வேண்டும். நீலகிரியில் வாழும் படுகர் இன மக்களின் பொருளாதாரமாக விளங்கும் பசுந்தேயிலைக்கு, 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
முந்தைய ஆண்டுகளில் தேயிலை வாரியம் சார்பில், தேயிலை விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டது.
மீண்டும் அத்தொகை வழங்க வேண்டும்,' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்பாடுகளை, திருப்பூர் மாவட்ட படுகர் நலச்சங்க நிர்வாகி கிருஷ்ணராஜ் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

