/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகுரு சர்வா 'சிஏ' அகாடமி மாணவியர் அபாரம்
/
ஸ்ரீகுரு சர்வா 'சிஏ' அகாடமி மாணவியர் அபாரம்
ADDED : ஏப் 15, 2024 10:46 PM

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீகுரு சர்வா 'சிஏ' அகாடமியில் பயின்று, 'பவுண்டேஷன்' தேர்வில் முதல் நான்கு இடங்களை பிடித்தவர் களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீகுரு சர்வா 'சிஏ' அகாடமி மாணவி மதுமிதா - 400க்கு 329 மதிப்பெண், ஏஞ்சல் - 323, கங்காதேவி - 316, ரித்திகா - 302 என, டிச., 23ல் நடந்த 'பவுண்டேஷன்' தேர்வில், முதல் நான்கு இடத்தை பிடித்தனர்.
திருப்பூர் ஈஸ்ட்மேன் நிறுவன உதவி பொதுமேலாளர் ஆடிட்டர் மவுலி மனோகரன், மாணவி யருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசுகையில், ஆடிட்டர் படிப்புகள் குறித்தும், உலகளாவிய வேலை வாயப்புகள் குறித்தும், தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து பேசினர். தாளாளர் சுதாராணி நன்றி கூறினார்.
'சிஏ பவுண்டேஷன்' மற்றும் 'இன்டர்' படிப்புகளுக்கான சேர்க்கை விவரங்களுக்கு, 96009 22888 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என நிர்வாகிகள் தெரித்தனர்.

