/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை விரிவாக்க பணி :மரங்கள் வெட்டி அகற்றம்
/
சாலை விரிவாக்க பணி :மரங்கள் வெட்டி அகற்றம்
ADDED : மார் 30, 2024 12:21 AM

திருப்பூர்:ஊத்துக்குளி ரோடு விரிவாக்கப்பணி துவங்கியுள்ளது. இதற்காக ரோட்டோரம் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
திருப்பூரிலிருந்து மண்ணரை வழியாக ஊத்துக்குளி செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த ரோடு தற்போது அகலப்படுத்தும் வகையில், திட்டமிடப்பட்டு பணி துவங்கியுள்ளது. இப்பணிக்காக இந்த ரோட்டில் மண்ணரை, பாளையக்காடு ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் அமைந்துள்ள மரங்கள் வெட்டி அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாலை அகலப்படுத்தும் பணிக்கு ஏதுவாக, இந்த ரோட்டில் இடையூறாக இருந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு மரங்கள் வெட்டி அகற்ற அறிக்கை தயாரித்து மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பேரில் வருவாய் துறையினர் முன்னிலையில், ஏல முறையில் உரிய தொகை செலுத்தி, மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. ரோடு பணிகள் நிறைவடைந்த பின்னர், விதிகளின்படி உரிய எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

