/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் டெய்ன்ட்ரீ பள்ளியில் தரமான கல்வி
/
ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் டெய்ன்ட்ரீ பள்ளியில் தரமான கல்வி
ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் டெய்ன்ட்ரீ பள்ளியில் தரமான கல்வி
ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் டெய்ன்ட்ரீ பள்ளியில் தரமான கல்வி
ADDED : ஏப் 12, 2024 10:36 PM
டெய்ன்ட்ரீ பப்ளிக் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது; கடந்த, 2014, ஜூன் மாதம், டெய்ன்ட்ரீ பப்ளிக் பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட முறையில், தரமான கல்வி வழங்கப்படுகிறது. திருப்பூரின் பல்வேறு இடங்களில் இருந்தும் பள்ளிக்கு மாணவ, மாணவியரை அழைத்து வர, வேன் வசதியுள்ளது. அறிவியல் ஆய்வுக்கூடம் வாயிலாக செய்முறை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற, பல ஆண்டு அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஏராளமான புத்தகங்களை உள்ளடக்கிய நுாலகமும் உள்ளது. மாணவர்களின் திறன் வளர்க்க விளையாட்டு மைதானம், கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெளியிடங்களில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்து, அவர்களின் உடல் மற்றும் மனவலிமை மேம்பட பயிற்சி வழங்கி வருகிறோம்.
மூன்று மாதத்துக்கு ஒரு முறை, வகுப்பு வாரியாக மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்கிறோம். ஆங்கில வழிக்கல்வியாக இருந்தாலும், தாய்மொழி தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தேசிய தலைவர்களின் நினைவு தினங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களின் தமிழார்வம் ஊக்குவிக்கப்படுகிறது. மாணவ, மாணவியரின் மனவலிமை மேம்பட யோகா, கராத்தே வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. தற்போது எல்.கே.ஜி., முதல், 12ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

