/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவு
/
இன்று வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவு
ADDED : மே 14, 2024 01:22 AM
திருப்பூர்:பிளஸ் 1 தேர்வு முடிவு இன்று காலை, 9:30 மணிக்கு வெளியாகிறது. 2023ல் மாநிலத்தில் முதலிடம் பெற்ற திருப்பூர், தற்போதும் முதலிடம் பெற்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளஸ் 1 தேர்வை, மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 851 பேர் எழுதியுள்ளனர். இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. தேர்ச்சி விபரங்களை கலெக்டர் கிறிஸ்துராஜ், முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்டோர் அறிவிக்க உள்ளனர்.
கடந்தாண்டு, 23 ஆயிரத்து, 356 மாணவர்கள் தேர்வெழுதி, திருப்பூர், 96.38 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றது. நடப்பாண்டு 3,495 மாணவர்கள் கூடுதலாக சேர்த்து, 26 ஆயிரத்து, 851 பேர் தேர்வெழுதியுள்ளனர். மீண்டும் முதலிடம் பெற்று திருப்பூர் சாதிக்குமா அல்லது அடுத்தடுத்த இடங்களை பெற்று சறுக்குமா என்பது இன்று காலை தெரிந்து விடும்.

