/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்ட விரோத குவாரி மீது நடவடிக்கை எடுக்க மனு
/
சட்ட விரோத குவாரி மீது நடவடிக்கை எடுக்க மனு
ADDED : ஆக 27, 2024 11:31 PM

திருப்பூர்:ஊத்துக்குளி தாலுகா, சர்க்கார் கத்தாங்கண்ணியை சேர்ந்த விவசாயி நடராஜ். கடந்த மே 12ம் தேதி, இவர் மீது மோதிய சரக்கு வாகனம் நிற்காமல் சென்று விட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யாததை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நடராஜ் அளித்த புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்ததால், காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது:
ஊத்துக்குளியில் சட்டவிரோத குவாரியின் இயக்கத்தை நிறுத்த காரணமான விவசாயி நடராஜ் மீது, சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளது. பலத்த காயங்களுடன் அவர் உயிர் தப்பியுள்ளார். மூன்று மாதங்களுக்குப்பின் தற்போதுதான், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கொலை முயற்சி வழக்காக மாற்ற வேண்டும்.
வருவாய்த்துறை, கனிமவளம், போலீசார் ஆகியோரின் மந்தமான செயல்பாட்டால், திருப்பூர் மாவட்டத்தில் கனிமளை சுரண்டல் தொடர்கிறது. எனவே, மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரிகளின் இயக்கம் குறித்து கண்காணித்து, விதிமீறும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக, சப்-கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
----------------
சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்.

