/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்களுக்கு மவுசு! மேல்நிலை, உயர்கல்வியில் ஒரே 'சாய்ஸ்'
/
கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்களுக்கு மவுசு! மேல்நிலை, உயர்கல்வியில் ஒரே 'சாய்ஸ்'
கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்களுக்கு மவுசு! மேல்நிலை, உயர்கல்வியில் ஒரே 'சாய்ஸ்'
கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்களுக்கு மவுசு! மேல்நிலை, உயர்கல்வியில் ஒரே 'சாய்ஸ்'
ADDED : மே 17, 2024 11:03 PM
உடுமலை;மேல்நிலை வகுப்புகளில் கம்ப்யூட்டர் பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தொடர்ந்து, உடுமலை சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை விறுவிறுப்பாக நடக்கிறது.
பிளஸ் 1 வகுப்பில், பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில் மாணவர்களின் மனநிலை ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாறுபடுகிறது. அப்போதைய சூழலில் உள்ள மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகள் அடிப்படையில், மாணவர்கள் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கின்றனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுப்பது, சில ஆண்டுகளுக்கு முன் மாறியது. பலரும் கலைப்பிரிவு பாடங்களுக்கு போட்டி போட்டனர். அடுத்து, 'நீட் 'நுழைவுத்தேர்வுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின், பல அரசு பள்ளிகளில் உயிரியல் பாடம் எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்தது.
நடப்பு கல்வியாண்டில், மீண்டும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் நடக்கும் சேர்க்கை குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்கள் இப்போது கலைப்பாடமோ, அல்லது அறிவியல் பிரிவோ, அதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இருந்தால் போதும் என சேர்க்கை பதிவு செய்கின்றனர். இன்றைய நிலையில் தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்பதால், மாணவர்கள் கம்ப்யூட்டர் பாடம் கற்பதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
உயிரியல் பாடங்களை தேர்வு செய்வோர் குறைந்து விட்டனர். கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,), டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட, கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவில் மேற்படிப்பை தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறு, கூறினர்.

