/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10 ரூபாய்க்கு 1 லிட்டர் குடிநீர் பஸ் ஸ்டாண்டுகளில் வருமா?
/
10 ரூபாய்க்கு 1 லிட்டர் குடிநீர் பஸ் ஸ்டாண்டுகளில் வருமா?
10 ரூபாய்க்கு 1 லிட்டர் குடிநீர் பஸ் ஸ்டாண்டுகளில் வருமா?
10 ரூபாய்க்கு 1 லிட்டர் குடிநீர் பஸ் ஸ்டாண்டுகளில் வருமா?
ADDED : ஏப் 26, 2024 01:52 AM
பல்லடம்:தமிழகத்தில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலும், 'அம்மா குடிநீர்' என்ற பெயரில், 10 ரூபாய்க்கு, 1 லிட்டர் மினரல் வாட்டர் விற்பனை செய்யும் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாயிலாக அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், குடிநீர் உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டது.
தற்போது, வெளி மார்க்கெட்டில், தனியார் குடிநீர் பாட்டில்கள், 20 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகின்றன. சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம், கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தின்போதே மூடப்பட்டது. அதன் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க.,வும் இதை கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக, பஸ்களில் வெளியூர் செல்லும் பொதுமக்கள், அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு மனம் வைத்தால் மீண்டும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது. பெயரை மாற்றியாவது, 10 ரூபாய்க்கு தரமான குடிநீர் வழங்க வேண்டும் என பயணியர் வலியுறுத்துகின்றனர்.

