/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துங்க! கிராம மக்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்
/
டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துங்க! கிராம மக்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்
டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துங்க! கிராம மக்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்
டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துங்க! கிராம மக்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்
ADDED : மே 21, 2024 11:48 PM
உடுமலை:உடுமலை ஒன்றியத்தில், டெங்கு தடுப்பு சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. கோடையின் தாக்கம் நடப்பாண்டில் அதிகரித்து, தற்போது பருவநிலை மாற்றம் அடைந்துள்ளது. கிராமப்பகுதிகளில் பரவலான மழை பெய்கிறது.
இதனால், பருவகால மாற்ற தொற்று நோய்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் தேவையாக உள்ளது.
டெங்கு போன்ற பல்வேறு நோய் காரணிகளை, முன்னெச்சரிக்கையுடன் தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தாமதமாக நடப்பதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
உடுமலை ஒன்றியத்தில் எரிசனம்பட்டி, வாளவாடி, அமராவதிநகர் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ் கொசுப்புழு ஒழிப்பு சிறப்பு குழுக்கள் உள்ளன.
இக்குழுவினர் மற்றும் ஊராட்சியின் துாய்மைக்காவலர்கள் இணைந்து, சுகாதாரத்துறை ஆய்வாளர் தலைமையில், வீடுகள்தோறும் தொடர்ந்து கொசுப்புழு பணிகளில் ஈடுபட வேண்டும்.
உடுமலை சுற்றுப்பகுதியில், இப்பணிகள் நோய் பாதிக்கும் பணிகளில் மட்டுமே, அதுவும் நோய்தாக்கிய பின்தான் மேற்கொள்ளப்படுவதாக, மக்கள் அதிருப்தியடைகின்றனர்.
அனைத்து பகுதிகளிலும், சுழற்சி முறையில் டெங்கு தடுப்பு மட்டுமின்றி, நோய்தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென, கிராமமக்கள் ஒன்றிய நிர்வாகத்துக்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் காய்ச்சல் போன்ற தொற்றுகளால் சிகிச்சைக்கு வந்த உடனே, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நோய்த்தடுப்பு பணிகளும் தீவிரப்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

