sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோடைகாலத்தில் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு தாகம் தீர்ப்பார்களா?அதிகாரிகள் கவனம் செலுத்த மக்கள் வேண்டுகோள்

/

கோடைகாலத்தில் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு தாகம் தீர்ப்பார்களா?அதிகாரிகள் கவனம் செலுத்த மக்கள் வேண்டுகோள்

கோடைகாலத்தில் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு தாகம் தீர்ப்பார்களா?அதிகாரிகள் கவனம் செலுத்த மக்கள் வேண்டுகோள்

கோடைகாலத்தில் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு தாகம் தீர்ப்பார்களா?அதிகாரிகள் கவனம் செலுத்த மக்கள் வேண்டுகோள்


ADDED : ஏப் 28, 2024 11:48 PM

Google News

ADDED : ஏப் 28, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் திட்டங்களை முறையாக செயல்படுத்தவும், வினியோக குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை, திருமூர்த்தி அணை தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகள்பயன்பெறும் வகையில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், நான்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த குடிநீர் திட்டங்கள் வாயிலாக, தினமும், 4.15 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு மையங்களில் சுத்திகரித்து, கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

வீணாகும் குடிநீர்


கிராமங்களுக்கு குடிநீர் வழங்க, போதிய அளவு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், அதிகாரிகள் அலட்சியம், குடிநீர் திட்ட பிரதான குழாய் மற்றும் பகிர்மான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு குடிநீர் வீணாகிறது.

மேலும், திருமூர்த்தி அணையில் துவங்கி, திட்ட குழாய்கள் உள்ள பகுதிகளில், பல இடங்களில் முறைகேடாக குழாய்களை உடைத்து,வழியோரத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் வினியோக குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வினியோகத்தில் குளறுபடி


குடிநீர் வடிகால் வாரியத்தின், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து, கிராமங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு, திட்ட ஒதுக்கீடு அடிப்படையில், குடிநீர் வழங்கப்படுவதில்லை.

மின் தடை, மோட்டார் பழுது, முறையான கண்காணிப்பு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது.

கோடை காலத்தில், பொதுமக்களுக்கு குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், திடீரென குடிநீர் வினியோகம் தடைபடுகிறது.ஏற்கெனவே, வினியோக குளறுபடி காரணமாக, ஒரு சில கிராமங்களில், வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், பெரும்பாலான கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

திருமூர்த்தி அணையில் குடிநீருக்கு என, நீர் இருப்பு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாரிகள் குடிநீர்திட்டங்களை முறையாக பராமரிக்காததால், கோடை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கொஞ்சம் கவனியுங்க!


குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்யவும்,வழியோர கிராமங்களில் குழாய் உடைப்புகளை சரி செய்யவும், குடிநீர் திருடப்படுவதை தடுக்கவும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கோடை காலத்தில் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படாத வகையில், ஜெனரேட்டர், மாற்று மின்மோட்டார்கள் தயாராக வைத்திருக்கவும், குடிநீர் திட்ட சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் நீரேற்று நிலையங்களில் தொழிலாளர்களை முறையாக பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

இயந்திரங்கள்பழுது, குழாய் உடைப்பு உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கோடை காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல், குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

நகராட்சியிலும் சிக்கல் இருக்கு!

உடுமலை நகராட்சி பகுதிக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, தினமும், 95 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.நகராட்சிக்கு வரும் குடிநீர் திட்ட குழாய்களிலும், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதோடு, குழாயை உடைத்து குடிநீர் திருடப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.மேலும், சுத்திகரிப்பு மையத்தில் நிர்வாக குளறுபடி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து நீர் வினியோகம் குளறுபடி காரணமாக, நகர பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே, நகர பகுதியிலும் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us