ADDED : செப் 12, 2024 11:32 PM
அவிநாசி : திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அம்மாபாளையம் பகுதி தி.மு.க., மற்றும் பாரதி நகர் கோபால்டு வீரேஸ்வரா திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகியோர் இணைந்து கலைஞர் நுாற்றாண்டு நினைவு பயிலரங்கம் என்ற வகுப்பறையை கலையரங்கத்தின் மேல் பகுதியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டியுள்ளனர்.
இதனை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பூண்டி நகராட்சி தலைவர் குமார், துணை தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள், அம்மாபாளையம் திராவிட பஞ்சாலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க முன்னாள் நிர்வாகிகள் நடராஜன், சாமிநாதன், வெங்கடாசலம், பொன்னப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், பி.டி.ஏ., நிர்வாகிகள், முன்னாள் மாணவர் பேரவை, பள்ளி மேலாண்மை குழு, பள்ளி வளர்ச்சி குழு ஆகியவற்றை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

